மொழிபெயர்ப்புக் கவிதை Road Not Taken -Robert Frost தேர்ந்தெடுக்கப்படாத பாதை - பிரகதி. சி (தமிழில்)
தேர்ந்தெடுக்கப்படாதப் பாதை - பிரகதி சி (தமிழில்)
மஞ்சள் நிற இலைகள் உதிர்ந்திருக்கும் காட்டினில்
இரு பாதைகள் அங்கே பிரிந்திருக்க
தனி ஒருவனாய் எப்படி இரு பாதையில் பயணிக்க முடியும் ?
இரண்டு பாதைகளின் முடிவுகளும் புலப்படாததால்
வெகு நேரம் சிந்தித்து, ஒவ்வொரு பாதையாக உற்று நோக்கினேன்.
புற்கள் அதிகம் இல்லாத பாதையைப் பார்த்து
பயணம் செய்ய தகுந்த வழியென நினைத்தேன்.
அதிகாலையில் அதிலே பயணம் செய்ய ஆயத்தமாக
சற்று இரண்டாம் பாதையைக் கவனித்தேன்
காலணி மிதிபடாது நொறுங்காத இலைகள் உதிர்ந்து கிடந்தது.
இந்த பாதையில் சென்றால் என்னவாகும் ?
இப்பாதை என் வாழ்வை மாற்றுமா ?
இப்பாதையில் சென்றால் மீண்டும்
முதல் பாதையில் பயணிக்க முடியுமா ?
எப்படி இப்பாதை அப்பாதைக்கு வழி வகுக்கும் ?
நான் பெருமூச்சு விட்டு சொல்கிறேன் !
எங்கோ காலங்கள் உருண்டோடிவிட்டன,
மீண்டும் நானும் அந்த இரு பாதைகளும் இருக்க
அதிகம் யாரும் செல்லாத
இரண்டாம் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.
அப்பாதையே என் வாழ்வில் எல்லா மாற்றத்திற்கும் காரணம்!
Comments
Post a Comment