மா. அன்பரசு குறுங்கதைகள் கைமாத்து திருச்சி கருமண்டபத்தில் ஒரே தெருவில் வசித்தார்கள் சந்தியாவும் சுமதியும். சந்தியாவின் வீடு பெரியது. சுமதியின் வீடு இரண்டு அறைகள் கொண்டது. வீடுகளுக்கிடையே வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கிடையே இல்லை. சந்தியா அழைத்தால் சுமதி ஓடிவந்துவிடுவாள். வீட்டு வேலை, தோட்ட வேலை, கார் ஓட்டுவது என எதுவாக இருந்தாலும் மறுப்பதில்லை. அவளுக்குக் கிடைத்த கூலியை வாங்கிக்கொள்வாள். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் ஒருபோதும் செய்யவில்லை. பணம் கேட்கவில்லை. “உனக்கு ஏதாவது தேவைப்பட்டா என்னிடம் கேட்கலாமே?” என்று ஒருநாள் சந்தியா கேட்டாள். “நீங்க வேலை கொடுக்கிறீங்களே அக்கா. அதுவே போதும்.” “அப்படியென்றால் அவசரச் செலவு?” “லட்சுமிகிட்ட கைமாத்து வாங்கிக்குவேன். திருப்பிக் கொடுத்துடுவேன்.” அந்தப் பதில் சந்தியாவுக்குள் ஏதோ ஒன்றை அசைத்தது. என்னிடம் ஏன் கேட்பதில்லை? மறுநாள் லட்சுமியிடம் பேசினாள். “இனிமே சுமதிக்குப் பணம் கொடுக்காதே.” “ஏன் அக்கா?” “சும்மா கொடுத்துக்கிட்டே இருந்தா பழக்கமாகிடும்.” அந்த வார்த்தை சுமதியிடம் போய்ச் சேர்ந்தது. அவள் எதுவும் சொல்லவில்லை. மறுநாள் சந்தியா அழைத்தாள். “சுமதி, க...
மெய் முறிந்தால் மெய் ( எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்) ( சந்திப்பு: ரா. அழகுராஜ் , ஜெ. மோகன் , ஆ. கிரண்குமார் , , ச. தணிகைவேலன் , த. சத்தியப் பிரியா, ர. பிரகாஷ்ராஜ் ) ரா. அழகுராஜ்: நீலம் என்ற வண்ணம் தொடக்கத்திலிருந்து உங்கள் எழுத்துகளில் வருகிறது அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா ? கடல் நீலம் , வானம் நீலம் , கடவுள் நீலம் கடவுளுக்கு நிகரான மீட்பர் அம்பேத்கர் நீலம். நீலம் என்பது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிறமாக உள்ளது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாளைக் கொண்டாட நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி சென்றிருந்தேன். அங்கு ஓரடி அல்லது முழங்கை அளவு நீள மார்பளவு சிலை எங்கு பார்த்தாலும் இருந்தன. அந்தச் சிலைகளும் நீல நிறத்தில் இருந்தன. அந்தச் சிலைகள் அம்பேத்கர் போல இல்லை. அவற்றை எப்படி அம்பேத்கர் என்கிறீர்கள் என்று கேட்டால் அவை நீலமாக இருப்பதால் அம்பேத்கர் என்றார்கள். கடல் தொடங்கி வானம் , கடவுள் , அம்பேத்கர் வரை ஒடுக்க...
Comments
Post a Comment