சத்யா - விசித்திரன் (தொடர் கதை - அத்தியாயம்:1)

 சத்யா

                  -விசித்திரன்


   அது ஒன்றும் அவ்வளவு பெரிய நகைச்சுவை எல்லாம் கிடையாது.  இருந்தும், குபீர்… …  சிரிப்பு சுவர்களில் பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. மேற்கூரையில் தொங்கும் மின்விசிறி மூன்று மாதங்களுக்கு முன்பு எப்படி சத்தமிட்டு இருந்ததோ அதே போல் கிரீச்… கிரீச்… என்று ஒரு வினோத சிரிப்பு. மறுபுறம் பள்ளிகளில் பேண்ட் குழுவினர் வைத்திருக்கும் பழைய ட்ரம்ப்பெட் பயிற்சியில்லாமல் ஊதும்போது தொடர்ச்சியின்றி கேட்கும் சத்தம் போல் மற்றொரு சிரிப்பு ஆ…. ன்  ஆ…. . ன். மூன்றாவது ஒன்றை எவ்வகையில் விவரிப்பது என்று தெரியவில்லை. யாரவது நேரில் வந்து பார்த்தால் தான் இன்னது என்று கூற முடியும். அவர்கள் மூவரும் கைகளைத் தட்டிக் கொண்டும் ஒருவர் மற்றொருவர் முகங்களைப் பார்த்து “யப்பா முடியலடா, வயிறு எல்லாம் வலிக்குது டா” என்று சொல்லிய படி சிரிப்பை தொடர்ந்தனர். சென்ற மாதம் தான் தொண்டையில் சதை வளர்ந்தது என ஆப்ரேஷன் முடித்து விட்டு வந்த காமேஷின் ரணமான உள்நாக்கு அவன் வாய் பிளந்து சிரிக்கும் போது அது உண்மை தான் என்று நம்ப வைத்தது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு எல்லோரும் சாப்பிட்ட உப்புக் கடலை மானோவின் பல்லுக்கும் ஈருக்கும் இடையில் இருப்பது  அவன் சிரிப்பு மூலம் தெரிய வந்தது. “ஏ! சும்மா இருங்கடா, போதும் அவன விட்றுங்கடா பாவம்” என்று சொல்லும் வசந்திற்கும் உதடுகளைப் பீறிட்டு சிரிப்பு கொப்பளித்தது. எல்லாம் கொஞ்ச நேரம் அமைதியாகி போயினர். சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை மூவரில் யாரோ ஒருவர் மீண்டும் அதைச் சொல்லிக் காட்ட, விட்ட இடத்தில் இருந்து கேலியும் கிண்டலும் தொடர்கிறது. அறையின் எல்லா மூலை முடுக்குகளிலும் சிரிப்பொலி உறைந்தது. திடீரென கதவு திறக்க ஒலி இன்னும் தன் கைகளைப் படர்ந்தது,  ஓட்ட மெடுத்தது. சதாம் புதிதாக ஜோதியில் ஐக்கியம் ஆயினான். “என்னடா வெளிய வரைக்கும் சத்தம் கேட்குது, இன்னா மேட்டர்”  என்றவுடன் சிரிப்பு சத்தம்  முழங்க “மாமே இத கேளு” என்று மனோ சதாம் சீண்டி “ வர வாரம் எங்க அக்காவுக்கு நிஸ்தாம்பூலம்ல அதுக்கு துணியெடுத்துக்க சொன்னாங்க துணி எடுக்க போக டைம் இல்ல, எல்லோர பேரும் சைஸூம் மட்டும் போன்ல சொல்ல என்னோட ஏரியா பையன் வாங்கிட்டு வந்தா”  சரி இதுல என்ன காமெடி இருக்கு என்று மனோ பேச்சில் குறுக்கிட்டான் சதாம். சிரிப்பு அடக்கி காமேஷ் “டேய் மாமே அவன் சொல்றத முழுசா கேளு” என்று சொல்லியவுடன்  மனோ விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான். “எங்க உட்ட  … ஆ!... எல்லா துணியும் வந்துச்சு வந்து எடுத்துட்டு போகஅக்கா கூப்டாங்க அங்க போன…..” என்று நீட்டி முடிக்கும் முன்னே அதிரும் படி மீண்டும் மனோ சிரிக்க சதாமிற்கு ஒரு பக்கம் ஆர்வமிகுதியும் மறுபுறம் ஒருவித கடுப்பும் மிகுந்தது “ஒத்தா என்னடா லூசு மாதிரி சிரிக்குறீங்க சொல்லுங்கடா” என்று உரத்த குரலில் கேட்க வார்த்தைகள் குலைந்து “எங்க எல்லாருக்கும் கரெக்டா துணி வந்துச்சு இவன் இருக்கான் ல “ என்று சத்யாவை நோக்கி “இவன் பேரும் சைஸூம் கேட்டு அவன் லேடிஸ் டிரஸ் வாங்கிட்டு வந்துருடா” என்பதைக் கேட்டவுடன் சதாமும்அந்த அட்டியில் லயித்து போனான். நால்வரும் திசைகள் போல் சத்யாவை சுற்றி நெருக்க மின்விளக்கு எரியும் அறையின் மூலையில் தஞ்சம் புகும் இருளாய் குறுகி போய் வெட்கி குலைந்து குலைந்து நின்றான்.


           அவனும் சிரித்துக்கொண்டு தான் இருந்தான் . அது தான் எப்படி என்று தெரியவில்லை. “இவன் மட்டும் எப்படி தொக்கா சிக்குறா , நீயும் அத கரெக்டா வாச்சா உட்டு இருக்கியே” என சதாம் காமேஷ் கேட்க “மாமே எனக்கே இது தெரியாது தோ! இவனே வசந்த் கிட்ட சொல்லிட்டு இருந்தா” என்றவுடன் சதாம் சத்யாவை நோக்கி “டேய் லூசு கூதியாடா நீ,  நீயே வாயக்குடுத்து சூத்த புண்ணாக்கி கிற” என்று சரமாரியாக திட்டித் தீர்த்தான். இவ்வளவு கேள்விகளையும் வாங்கிக்கொண்டு இருந்த சத்யா விடம் இருந்து அசட்டை சிரிப்பும், சிணுங்கலும் தவிர வேறொன்றும் பதிலாக கிடைக்க வில்லை. “சரியான அம்டா டா நீ” என்ற பேச்சுகளுடன்  அந்த அறையை  விட்டு கால்கள் நகர்ந்தன. சத்யாவின் தோள் மீது கைகளைப் போட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாக அவனைத் தள்ளி சாலையின் இருபுறங்களிலும் அலைக்கழித்து வந்தனர். இடப்பக்கமா வரும் வசந்த் சத்யாவின் தோள் மீது வலக்கைப் போட்டு பேச்சு கொடுத்து கொண்டே பாம்பு ஊர்வது போல் மெதுவாக கைகளை  மார்பின் மீது நகர்த்தி மார்பு காம்பினை சட்டென்று கிள்ளிவிட “டேய்”  என்ற கூச்சலிட்டு சற்றே விலகி முன் நோக்கி ஓடினான். காமேஷும் தன் பங்குக்கு அவனின் இடுப்பில் தன் கைகளை இதமாக அழுத்த “மையிரு சும்மா இருடா லவடிக்கபால்”  என்று கோபம் தொனித்த குரலில் திமிறினான் சத்யா. நெடுநேரம் கழித்து அவன் பேசிய முதல் வார்த்தை அது தான். மனோ ரொம்பவும் நாகரிகமானவன், இது போன்ற சிலுமிஷங்கள் ஏதும் செய்யாமல் தென்றல் உரசுர மாதிரி சத்யாவின் காதருகே சென்று “மாமே நீ அந்த டிரெஸ்ஸ போட்டு பாத்து எனக்கு ஃபோட்டோ அனுப்புடா, மூடா இருக்கும் போது பாப்பேன்” என்று சொன்னவுடன் காமேஷும் வசந்தும் தந்த குடைச்சலை மறந்தே போனான் சத்யா. வாயடைத்துப் போய் “ஏன்டா இவ்வளவு காஜியா இருக்கீங்க” என்று சிரிப்பு கலந்து கூறி இவர்களுக்கு முன்னே ஐந்தடி இடைவெளி விட்டு திரும்பி பார்த்து பதற்றத்துடன் கங்காரு குட்டி போல துள்ளித் துள்ளி விலகி ஓடினான்.


             இந்த கவனமான நடையெல்லாம் முல்லாத் தெரு டொக்கில் நிறைவுற்றது. அங்கு இருக்கும் காளான் கடை ரொம்ப ஃபேமஸ். செயின்ட் பால் ஸ்கூல் படிக்கும் பசங்க மொத்த கிராக்கியில் தான் அந்த கடை இவ்வளவு காலம் ஓடுது. பீச் ரோட்டில புதிதா கட்டுன அப்பாட்மென்ட் ல பிளாட் வாங்கிப் போட்டாலும், சமோசா மடித்து எண்ணெயில் பொரிச்சு எடுக்கும் நரேன் அண்ணன் தொனி இன்னும் மாறல. அதே கடையில் இவர்களும் ரொம்ப நாளாக சாப்பிட்டு வருகிறார்கள். “நரேன் அண்ண அங்க கடை போடுறதுக்கு முன்னாடி அங்க ஒரு ஆயா பஜ்ஜி போண்டா  சுட்டு வித்துனு இருந்துது” என்று கூறும் அளவுக்கு அவர்கள் இங்கே பழைய கிராக்கி “ அண்ணே அஞ்சு காளான்! காரம் நல்ல தூக்கலா போடுங்க” என்று மனோ சொல்லிவிட்டு, தண்ணீர் மொண்டு வாயினைக் கொப்பளித்து சுவரின் மீது துப்ப படுத்திருந்த நாய் தெரித்து ஓடியது. நால்வரும் ஆவிப்பறக்க வந்த காளானை ஊதி ஊதி நடந்த நிகழ்வுகளோடு அசைப்போட்டுக் கொண்டிருந்தனர். சத்யா தட்டினை வெரித்து பார்த்து தனக்கு தானே சிரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒன்று மட்டும் தான் நினைவில் ஓடிக் கொண்டு இருந்தது எல்லோரும் சிரிக்கிறார்கள்  என்று புன்முறுவல் செய்தான். “பரவாயில்ல இந்த காமெடி இந்த அளவுக்கு நல்ல இருக்கும் நெனச்சு கூடப் பாக்கல” என தன்னைத் தானே மெச்சிக்கொண்டான். “இவன் சரியான ஜோக்கர் டா” என்ற சதாமின் ஏராளப் பேச்சு சத்யாவுக்கு பாராட்டாகவே தோன்றியது காரணம் அவனுக்கு தெரியும் அவன் ஹீரோவாக முயற்சி செய்யவில்லை என்று….                                                          

   (நீளும்‌..‌‌.)

Comments

Popular posts from this blog

நடிப்பு என்பது வாழ்வு. நாடகம் என்பது கூட்டுவாழ்வு. -நாடகவியலாளர் ஞா. கோபியுடன் உரையாடல்

கூதிர் பருவம் –10, அக்டோபர்- 2024

கூதிர் இதழ்களுக்கான இணைப்பு