இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி

இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் - அழகுராஜ் ராமமூர்த்தி பிரதாபசந்திர விலாசம் தமிழ் நாடக வரலாற்றில் நாடகத்தின் போக்கை மாற்றிய நாடக இலக்கிய வரிசையில் நிற்கத்தக்க படைப்பு. இந்நாடகத்தை திண்டிவனத்தைச் சேர்ந்த ப. வ. இராமசாமி ராஜு எழுதியுள்ளார். இந்திரா பார்த்தசாரதி திண்ணை இதழில் 2006ல் எழுதிய “தமிழின் முதல் இசை நாடகம்” என்ற கட்டுரை பிரதாப சந்திர விலாசம் பற்றிய கவனத்தைத் தமிழ் பரப்பில் கொடுத்தது. அதன்மூலம் 2007ல் இந்நாடகம் ஏனி இந்தியன் பதிப்பகம் மூலம் மறு பதிப்பும் ஆனது. அக்கட்டுரையிலிருந்தே நாமும் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். 1871ல் பிரதாபசந்திர விலாசம் எழுதப்பட்டதாக இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார். மேலும் இந்நாடகம் மேடை ஏற்றப்பட்டதா? என்கிற ஐயத்தை முன்வைத்து க.நா.சு தன்னிடம் தனிப்பேச்சில் பகிர்ந்த செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” நூல் இராமசாமி ராஜு மற்றும் பிரதாபசந்திர விலாசம் அரங்கேறிய செய்தியை அறியத் தருகிறது. “காரிய தரிசியாகிய முத்துக்குமாரசாமி செட்டியாரும் நானுமாக காலஞ்சென்ற ராம...