காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி

காட்சிப் பொருளல்ல கருத்துப் பொருள் - அழகுராஜ் ராமமூர்த்தி குருகு இணைய இதழில் எழுதப்பட்டுள்ள கிறிஸ்துவின் சித்திரங்கள் கட்டுரைத் தொடர் தெய்வீக அம்சம், துயரமும் மறைஞானமும், உடலும் ரத்தமும், உலகப்போர்கள் என்ற நான்கு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாமரைக்கண்ணன் அவிநாசி எழுதிய இத்தொடர் முழுமையாக இணையத்தரவுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.. கிறிஸ்துவின் ஓவியங்களைப் பற்றிய இத்தொடர் ஓவியங்களை கிறிஸ்தவர்கள் எப்படியாக பார்த்தார்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. மோசேயின் காலத்தில் சிற்பங்களையும் சிலைகளையும் எகிப்தியர் முதலான பிற இனத்தவர்கள் வணங்கியபோதும் கூட உருவமற்ற வழிபாட்டையே ஆபிரகாமின் வழியில் அவரது வம்சாவழியினர் கைக்கொண்டனர். இவையெல்லாம் பிற்கால கிறிஸ்தவத்திற்குரிய தோற்றுவாய் என்பதால் அவற்றையும் கணக்கில் கொண்டே ஓவியம் முதலான கலைகள் கிறிஸ்தவ பின்புலத்தில் செயல்படுவதைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேபோல குறியீடுகள் தான் ஓவியத்திற்கும் எழுத்திற்கும் அடிப்படை. உருவ வழிபாடற்ற பின்னணியைக் கிறிஸ்தவம் கைக்கொண்டதால் கிறிஸ்துவின் ஓவியங்கள்...