எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து - இரா. வீரமணி
எதார்த்த வாழ்வியலிலிருந்து முகிழ்க்கும் புனைவு : ‘குதிப்பி’ புதினத்தை முன்வைத்து - இரா. வீரமணி சமையல் ஒரு கலையாகுமா? சமையல் கலை குறித்த இலக்கியங்கள் தமிழில் பெரிய அளவில் வெளிவந்திருக்கின்றனவா? (‘மடைநூல்’ எனும் சமையல் கலை நூல் இருந்ததாகச் சீவக சிந்தாமணி உரையின் வழி எடுத்துக் காட்டுவார் கே.கே.பிள்ளை. ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்றவை பெயரளவில் மூலிகைப் பொருட்களால் சுட்டப்படும் அறநூல்களே தவிர, உணவுப் பண்பாட்டை விரிவாகப் பேசுவன அல்ல.) பாணர், விறலியர் போன்று சமையல் கலைஞர்களின் வாழ்வியல் எங்கேனும் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியிருக்கிறதா? இப்படியான கேள்விகள் நம்முள் எழுந்திருக்கக்கூடுமா என்பது சந்தேகம்தான். இக்கேள்விகளுக்குத் தமிழ்ச் சூழலில் நெடிய வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. அவ்வரலாற்றைப் பேசும் முன், இவ்வரலாறு பேசப்படும் தருவாயை ஏற்படுத்தியை நூலினைக் குறித்து அறியவேண்டு...