வாசகர் பகுதி
வாசகர் பகுதி கூதிர் இணைய இதழ் நான் முறையாக முழுவதுமாக படித்து வரும் இதழாக இருந்து வருகிறது . இதன் முதல் இதழின் முகப்பில் இதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவராகிய மோகன் குறிப்பிட்ட அடிகள் " எழுதுவதை தள்ளிப் போடாதீர்கள் , எண்ணங்கள் விரிவடைய எழுதுங்கள் " என்னும் தொடர் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது . அத்தொடர் தொடர்ந்து இதில் படைப்புகளை வழங்கி வரும் படைப்பாளர்கள் தொடர வழி வகுத்திருக்கலாம் . குறிப்பாக எனக்கு கவிஞர்களை பற்றி கவிதைகளைப் பற்றி எதுவும் தெரியாது , ஆனால் தினேஷ்குமார் , வேலாயுதம் பொன்னுசாமி , றாம் சந்தோஷ் , திரமிளன் முதலானோர் படைப்புகள் பிடிக்கும் . அத்தோடு விசித்திரனின் சத்யா தொடர் எனது சிறுவயது நினைவுகளை கிளறுவதாக உள்ளது . குறிப்பாக இரண்டாம் இதழில் சிறுவர்களின் செயல்பாடு எனது பள்ளிப் பருவத்தை நினைவூட்டியது . அழகுராஜ் கட்டுரைகள் பெரும்பாலும் நான் மறுவாசிப்பிற்கு உட்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது . மேலும் , இதழில் வாசகர் பகுதியில் இடம்பெறும் ...