கூதிர் பருவம் –7 ஜூலை- 2024

கூதிர் பருவம் –7 ஜூ லை - 2024 தொகுப்பாசிரியர் பகுதி ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் வரவேண்டிய கூதிர் ஏழாவது இதழ் மாத இறுதியில் வெளியாகிறது. இவ்விதழில் திருநங்கையர், சிறுகதைகள், கவிதை, திரைப்படம், சிற்றிலக்கிய முன்னுரை என பல்வேறு வகைப்பட்ட கட்டுரைகளோடு தொடர்கதை மற்றும் கவிதைகளும் வெளியாகிறது. புதுவை பகுதியைச் சார்ந்த திருநங்கைகளுடன் நிகழ்த்திய உரையாடலின் விளைவாக எழுதப்பட்ட பரசுராமனின் கட்டுரை, சாகித்ய அகாதமியின் 2024ஆம் ஆண்டு யுவ புரஸ்கார் பட்டியலில் இடம்பெற்ற கவிதை நூல்களை பற்றிய பதிவு, கூதிர் ஐந்தாம் இதழில் வெளியான பிரபஞ்சனின் ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ சிறுகதை தொடர்பான வாசக அனுபவம் வெளியானது. அதன் தொடர்ச்சியாகவே கோ.வெங்கடாசலத்தின் ‘யார் தான் பாவம் இல்லை’ கட்டுரை இவ்விதழில் வெளியாகிறது. கல்விப்புலம் மற்றும் மாணவர் மனநிலை, கிறிஸ்தவத் தொன்மம் ஆகியவற்றை முன் வைக்கக்கூடிய கட்டுரை இவ்விதழுக்கு வலு சேர்க்கிறது. மேலும் மதில் திரைப்படம் பார்த்த அனுபவம், மயிர் விடு...