Posts

Showing posts from September, 2025

மெய் முறிந்தால் மெய் (எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்)

Image
மெய் முறிந்தால் மெய் ( எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுடன் உரையாடல்) ( சந்திப்பு: ரா. அழகுராஜ் , ஜெ. மோகன் , ஆ. கிரண்குமார் , , ச. தணிகைவேலன் ,                த. சத்தியப் பிரியா ர. பிரகாஷ்ராஜ் ,) ரா. அழகுராஜ்: நீலம் என்ற வண்ணம் தொடக்கத்திலிருந்து உங்கள் எழுத்துகளில் வருகிறது அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா ?     கடல் நீலம் , வானம் நீலம் , கடவுள் நீலம் கடவுளுக்கு நிகரான மீட்பர் அம்பேத்கர் நீலம். நீலம் என்பது தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் நிறமாக உள்ளது. நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய நாளைக் கொண்டாட நாக்பூரில் உள்ள தீக்ஷா பூமி சென்றிருந்தேன். அங்கு ஓரடி அல்லது முழங்கை அளவு நீள மார்பளவு சிலை எங்கு பார்த்தாலும் இருந்தன. அந்தச் சிலைகளும் நீல நிறத்தில் இருந்தன. அந்தச் சிலைகள் அம்பேத்கர் போல இல்லை. அவற்றை எப்படி அம்பேத்கர் என்கிறீர்கள் என்று கேட்டால் அவை நீலமாக இருப்பதால் அம்பேத்கர் என்றார்கள். கடல் தொடங்கி வானம் , கடவுள் , அம்பேத்கர் வரை ஒடுக்க...